மீன்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை நீக்கக் கோரிக்கை - ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மீன்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளது.
மீன்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை நீக்கக் கோரிக்கை - ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
ராமேஸ்வரத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒவ்வொரு படகும் கடலுக்கு சென்று வரும்போது வலையில் கிடைக்கும் சூடு மற்றும் கலச மீன்கள், எண்ணெய் மற்றும் கோழி தீவனம் தயாரிக்க  பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த மீன்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்து உள்ளது. இதனால் 15 ரூபாய்க்கு விலை போன மீன்கள் தற்போது ஆறு ரூபாய்க்கு கூட விலைபோகவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், அரசு உடனடியாக இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி,  ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் எதிரே மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்