கன்னியாகுமரி அருகே அவதூறு பரப்பி திருமண வரன் தடுக்கும் கும்பல் - வஞ்சபுகழ்ச்சியுடன் சிங்கிள்ஸ் வைத்த பேனர்

திருமண வரன் தடுக்கும் கும்பலுக்கு நன்றி தெரிவித்து இளைஞர்கள் வஞ்சபுகழ்ச்சியுடன் பேனர் வைத்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அருகே அவதூறு பரப்பி திருமண வரன் தடுக்கும் கும்பல் - வஞ்சபுகழ்ச்சியுடன் சிங்கிள்ஸ் வைத்த பேனர்
x
புதுவிளை கிராமத்திற்கு வரன் தேடி வரும் பெண் வீட்டாரிடம், ஒரு கும்பல் அவதூறு பரப்பி, திருமணத்தை தடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான திருமணமாகாத இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, வரன் தடுப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து வஞ்சபுகழ்ச்சியுடன் பேனர் வைத்துள்ளனர். அதில், வரன் தடுக்கும் தங்களது நற்பணி தொடருமாயின், சம்பந்தப்பட்டவர்களுடைய பெயர் புகைப்படம் ஆதாரத்துடன் வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமண வரன் தடுப்பதை முன் கூட்டியே எங்களிடம் தகவல் தெரிவித்தால் வாகன வசதி செய்து தரப்படும் இப்படிக்கு திருமண வரன் தேடும் இளைஞர்கள் என கூறப்பட்டுள்ளது. கிராம எல்லையில் சிங்கிள்ஸ் வைத்த வஞ்சபுகழ்ச்சி பேனரை பொதுமக்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்