கொள்ளையர்களை விரட்டி அடித்த வீர தம்பதிக்கு போலீஸ் பாராட்டு
நெல்லை அருகே கடையத்தில் அரிவாளுடன் வீடு புகுந்த கொள்ளையர்களை விரட்டி அடித்த வீர தம்பதியை நேரில் சந்தித்து, போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
நெல்லை அருகே கடையத்தில் அரிவாளுடன் வீடு புகுந்த கொள்ளையர்களை விரட்டி அடித்த வீர தம்பதியை நேரில் சந்தித்து, போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். கல்யாணி புரம் என்ற இடத்தில், தோட்டத்துடன் கூடிய வீட்டில் இருந்தபோது, இந்த சம்பவம் நிகழ்ந்தது. கொள்ளையர்களை வீர தம்பதி, விரட்டி அடிக்கும் சிசிடிவி- காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை போலீஸ் தீவிரம்
கொள்ளையர்களை பிடிக்க, 4 தனிப்படைகளை அமைத்துள்ள நெல்லை போலீசார், நிகழ்விடத்தை நேரில் பார்வையிட்டனர். நடந்தது என்ன என வீர தம்பதியிடம் கேட்டறிந்த நெல்லை போலீசார் கொள்ளையர்களுடன் துணிச்சலாக போராடியதற்கு பாராட்டு தெரிவித்தனர்.
Next Story