201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கி முதல்வர் கவுரவிப்பு

நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, விஜய் ஆண்டனி மற்றும் நடிகை பிரியா மணி ஆகியோருக்கு தமிழக அரசின் உயரிய கலைமாமணி விருது வழங்கப்பட்டு உள்ளது.
201 பேருக்கு கலைமாமணி விருது வழங்கி முதல்வர் கவுரவிப்பு
x
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், சபாநாயகர் தனபால் முன்னிலையில், 201 பேருக்கு, பொற்பதக்கம், விருதுகள் வழங்கி கவுரவித்தார். டாக்டர் அமுதகுமார் மற்றும் அரிகேசநல்லூர் வெங்கட்ராமன் ஆகியோருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலைமாமணி விருது வழங்கினார்.


விருது விழாவில் பிரியா மணி - விஜய் சேதுபதி பங்கேற்கவில்லை

இதுதவிர நடிகர்கள் பிரசன்னா, சசிகுமார், பாண்டியராஜன், சூரி, கானா பாலா, நடிகைகள் நளினி, குட்டிபத்மினி, நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா, உள்ளிட்டோருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலைமாமணி விருதுகளை வழங்கி, கவுரவித்தார்.  நடிகர் பிரபுதேவாவிற்கு பதிலாக அவரது தந்தையும், நடிகை பிரியாமணிக்கு பதிலாக அவரது தாயாரும் கலைமாமணி விருதுகளைப் பெற்றனர். இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா,,பாடகர் உன்னிமேனன், பாடலாசிரியர் யுகபாரதி, கானா பாடகர் உலகநாதன் உள்ளிட்டோரும் கலைமாமணி விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். 


ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள்

கலைமாமணி விருது வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு சார்பில், இனி ஆண்டு தோறும் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். நலிந்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவி தொகை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்