'நெக்ஸ்ட்' தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி
மத்திய அரசின் தேசிய நிறைவுத் தேர்வு என்றழைக்கப்படும் நெக்ஸ்ட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தேசிய நிறைவுத் தேர்வு என்றழைக்கப்படும் நெக்ஸ்ட் தேர்வு எதிர்ப்பு நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீமோகாகல் தடுப்பூசி, ரத்த நாள அறுவை சிகிச்சையை அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பேரணியையும் அமைச்சர்கள் ஆரம்பித்து வைத்தனர். பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் இடம்பெற்றுள்ள பல்வேறு சரத்துகளை தமிழக அரசு எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.
Next Story