மேட்டூர் அணையை திறந்துவைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை அ.தி.மு.க அரசு நிச்சயம் நிறைவேற்றும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
x
டெல்டா மாவட்டங்கள் பாசன வசதிக்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் திறந்து வைத்தார். அணையில் இருந்து வேகமாக பெருக்கெடுத்த காவிரியை மலர் தூவி முதலமைச்சர் வரவேற்றார். வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்றும் விவசாயிகள் மிகவும் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், காவிரியின் குறுக்கே மேலும், 3 தடுப்பணைகள் கட்டுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறினார். மேலும், காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை அ.தி.மு.க அரசு நிச்சயம் நிறைவேற்றும் என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதன் மூலம் 125 டி.எம்.சி கூடுதலாக கிடைக்கும் என்றும் கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பயன்பெறும் எனவும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்