"காஷ்மீர் விவகாரம் : ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதல்" - முத்தரசன் குற்றச்சாட்டு
அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தை பிரித்திருப்பது நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தை பிரித்திருப்பது நாட்டின் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மருத்துவ சீட் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட கீர்த்தனாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற பெரம்பலுார் சென்ற அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாட்களை அதிகப்படுத்தி அவசர அவசரமாக 32 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Next Story