உமா மகேஸ்வரி கொலை வழக்கு: கார்த்திகேயன் ஆஜர், ஆக. 26- ல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
உமா மகேஸ்வரி கொலை வழக்கு: கார்த்திகேயன் ஆஜர், ஆக. 26- ல் மீண்டும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு
x
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.  உமா மகேஸ்வரியுடன் அவரது கணவர் மற்றும் பணிப்பெண் என ஒரே நேரத்தில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, திமுக பெண் பிரமுகர் சங்கரன்கோவில் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்ற கார்த்திக் ராஜா கைது செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீசார், 5 நாள் விசாரணைக்குப்பின், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாபு இல்லத்தில் கார்த்திகேயனை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 26 ம் தேதி, கார்த்திகேயனை மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்