தொழிலதிபரிடம் செல்போன் பறித்த கொள்ளையன் : செல்போன் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த தொழிலதிபரிடம் செல்போன் பறித்துச் சென்ற கொள்ளையனை 5 மணி நேரத்துக்குள் போலீசார் கைது செய்தனர்.
தொழிலதிபரிடம் செல்போன் பறித்த கொள்ளையன் : செல்போன் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியீடு
x
சென்னை தியாகராயநகர் கிரி சாலையில் வசித்து வருபவர் சேஷாத்திரி நாதன். இவர் இறக்குமதி தொழில் நடத்தி வருகிறார். நேற்று காலை இவர் கோட்ஸ் சாலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த போது பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் திடீரென சேஷாத்ரிநாதனிடம் இருந்து  செல்போனை பறித்துச் சென்றார். இதுதொடர்பாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் இருந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த 20க்கும் மேற்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்