எலும்புக் கூடான பாலம் : சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து பக்கவாட்டு சுவர்கள் சேதம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டியில், சிதிலமடைந்து எலும்புக் கூடாகிப் போன பாலத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டியில், சிதிலமடைந்து எலும்புக் கூடாகிப் போன பாலத்தை சீரமைத்து தருமாறு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு வராக நதியின் மேல் இந்தப் பாலம் கட்டப்பட்டது. எ.பதுப்பட்டி, காமாட்சிபுரம், தேவதானபட்டி, சில்வார்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பாதையாக உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் உள்ள சிமெண்ட் காரைகள் உதிர்ந்து, கம்பிகள் துருத்தி நிற்கின்றன. எலும்புக் கூடாக காட்சியளிக்கும் பாலத்தை உடனடியாக சீரமைத்து தருமாறு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story