சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து : 30 கூலி தொழிலாளர்கள் காயம்
திண்டுக்கல் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கூலி தொழிலாளர்கள் 30 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கூலி தொழிலாளர்கள் 30 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கோனூர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 36 பேர் செங்கல் சூளை வேலைக்காக வேனில் சென்றனர். நவாபட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்து வேன் சாலையின் நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 30 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story