"திருவண்ணாமலையில் 35,443 வழக்குகள் நிலுவையில் உள்ளது" - உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் வேதனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 443 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 35 ஆயிரத்து 443 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் மற்றும் கலசப்பாக்கம் பகுதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய நீதிபதி கிருஷ்ணகுமார் இதனை தெரிவித்தார். திருவண்ணாமலையில் 5 ஆயிரத்து188 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். இந்த விழாவில் நீதிபதி ராமலிங்கம் மற்றும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story