"கால்நடைகள் நலனுக்காகவே அவசர சட்டம்" - உடுமலை ராதாகிருஷ்ணன்
கால்நடைகளின் நலனை காக்கவே அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
கால்நடைகளின் நலனை காக்கவே அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கலந்துகொண்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின கொள்ளிக் காளைகளின் உடல்தகுதியை பரிசோதிக்கவே அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால், கொள்ளி காளைகளுக்கு நோய் தாக்கம் இருக்கிறதா என பரிசோதித்த பின்னர், பசுகளுடன் இணை சேர்க்கலாம் எனவும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Next Story