காந்திநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்ரமித்ததாக புகார்
காந்திநகரில் உள்ள தனியார் கல்லூரி மாநகராட்சிக்கு சொந்தமான 5 புள்ளி 20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
சென்னை அடையாறு காந்திநகரில் உள்ள தனியார் கல்லூரி, மாநகராட்சிக்கு சொந்தமான 5 புள்ளி 20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி ஊழியர்கள் நிலத்தை கையகப்படுத்த சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கையகப்படுத்த வந்த ஜேசிபி இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டம் நடந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story