"அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது" - முதலமைச்சர், துணை முதலமைச்சர்

வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் அதிமுகவின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்திருப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வமும் , இணை ஒருங்கிணைப்பாளரும் , முதலமைச்சருமான பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது - முதலமைச்சர், துணை முதலமைச்சர்
x
வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் அதிமுகவின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்திருப்பதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான  ஓ. பன்னீர் செல்வமும் , இணை ஒருங்கிணைப்பாளரும் , முதலமைச்சருமான பழனிசாமியும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி. சண்முகம் மிக மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருப்பதாகவும்,  இது அதிமுகவை பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்திற்குள் அடங்கும் தேர்தல் முடிவு என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என்பதை தான், வேலூர் தொகுதியில் இரட்டை இலை பெற்றிருக்கும் வாக்குகள் பறைசாற்றுவதாகவும், வாக்களித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்