பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு
பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரதமருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மரியாதை நிமித்தமாக பிரதமரை தமிழக ஆளுநர் சந்தித்திருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார்.
Next Story