மக்களை பாதுகாக்கவே ஸ்டெர்லைட் ஆலையை மூடினோம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்
தூத்துக்குடி மக்களை பாதுகாக்கவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடினோமே தவிர, துப்பாக்கிச் சூட்டினால் அல்ல என, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசை தடுத்து தூத்துக்குடி மக்களை பாதுகாக்க, ஸ்டெர்லைட் ஆலையை மூடியதாக கூறிய தமிழக அரசு, அதில், எந்த தவறும் இல்லை என தெரிவித்தது. பொது மக்கள் நடத்திய போராட்டம் மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடினோம் என்பதில், துளியும் உண்மை இல்லை என அரசு வாதிட்டது. மிகப் பெரிய அளவில் மாசு ஏற்படுத்திய இந்த ஆலையை, மற்ற ஆலைகளுடன் ஒப்பிட முடியாது என்றும், இந்த ஆலைக்கு, உச்ச நீதிமன்றம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததும் சுட்டிக் காட்டப்பட்டது.
விதி மீறல் தொடர்ந்ததால், ஸ்டெர்லைட் ஆலையை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் எடுத்துக்காட்டி, தமிழக அரசுத் தரப்பில், வாதிட்ட நிலையில், வழக்கு மீண்டும், இன்று விசாரிக்கப்பட உள்ளது.
Next Story