ராமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாணம் - கோவில் நடை அடைப்பு
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாணத்தை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாணத்தை ஒட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆடித் திருக்கல்யாணத்தின் முக்கிய நிகழ்வான மாலை மாற்றும் நிகழ்வு நடைபெறும் நிலையில், காலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3 மணி முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாள் பர்வதவர்த்தனி காலை 7 மணிக்கு தவக்கோலத்தில் எழுந்தருளி மண்டபத்திற்கு புறப்பட்டதால் கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட முடியாமலும், சாமி தரிசனம் செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர்.
Next Story