சிறுதேர் தயாரிக்கும் பணி மும்முரம் : சிறுவர்களின் மனம் கவரும் சிறிய தேர்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கும்பகோணம் அருகே சிறுவர்களின் மனம் கவரும் சிறிய தேர் தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
சிறுதேர் தயாரிக்கும் பணி மும்முரம் : சிறுவர்களின் மனம் கவரும் சிறிய தேர்
x
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, கும்பகோணம் அருகே சிறுவர்களின் மனம் கவரும் சிறிய தேர் தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. மேலகோட்டையூர் கிராமத்தில் வசிப்பவர்கள், விலை குறைந்த பலகைகளை வாங்கி, அதனை கொண்டு சப்பரம் என்றழைக்கப்படும் சிறிய தேரை தயாரிக்கின்றனர். பெண்கள் அந்த தேருக்கு, வண்ண காகிதங்களை ஒட்டி அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சப்பரம் 125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தேரில், காப்பு அரிசி உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து குழந்தைகள் காவிரி ஆற்றில் படைப்பதற்காக இழுத்துச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்