அனுமதியின்றி ஆலோசனை கூட்டம் என புகார் : ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது வழக்கு
ஆம்பூரில் அனுமதியின்றி ஆலோசனை கூட்டம் நடத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மக்களவை இடைத்தேர்தலையொட்டி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் 2ஆம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட பிரசார கூட்டத்திலும் அவர் பேசினார். இதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை என கிராம நிர்வாக அலுவலர் செந்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்த தேர்தல் பறக்கும் படையினர், மண்டபத்தை இழுத்து மூடி சீல் வைத்தனர். இது தொடர்பாக ஆம்பூர் வட்டாட்சியர் சுஜாதா கொடுத்த புகாரின் பேரில், திமுக தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த், தனியார் மண்டப உரிமையாளர் ஜகிரியா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story