வேலூர் தொகுதியில் முதல்வர் 2-வது கட்ட பிரசாரம்

வேலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
வேலூர் தொகுதியில் முதல்வர் 2-வது கட்ட பிரசாரம்
x
வேலூர் மக்களவை தொகுதியில், தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால், பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 2 -வது கட்ட பிரசாரத்தை துவக்குகிறார். இன்று மாலை 5 மணிக்கு, அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாலை 6 மணிக்கு மேல், வேலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இவ்விரு கூட்டங்களுக்கும் செல்லும் வழியில், சாலையோரம் மக்களை சந்தித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்