நிலம் பத்திர பதிவுக்கு ரூ. 3 லட்சம் லஞ்சம் - சார்பதிவாளர் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அறக்கட்டளைக்கு தானமாக பெற்ற நிலத்திற்கு பத்திர பதிவு செய்து தர 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நிலம் பத்திர பதிவுக்கு ரூ. 3 லட்சம் லஞ்சம் - சார்பதிவாளர் பணியிடை நீக்கம்
x
இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது குற்றச்சாட்டுக்கு ஆளான சார் பதிவாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார். அவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என பதிவுத்துறை தலைவர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சார்பதிவாளர்  மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஒரு மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறி, வழக்கை சிறிது நேரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதையடுத்து திருமயம் சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து, பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார். பின்னர் இந்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் மீதான லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடவடிக்கைக்கு அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆகஸ்ட் 6-ந்தேதி வரை அவகாசம் வழங்கி விசாரனையை ஒத்திவைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்