சென்னையில் தாயின் கள்ளக்காதலனை கொன்ற மகன் - தப்பியோடிய போது பிடிக்க சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் தாயின் கள்ளக்காதலனை கொலை செய்து விட்டு தப்பியோடியவர்களை பிடிக்க சென்ற காவல் உதவி ஆய்வாளர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தாயின் கள்ளக்காதலனை கொன்ற மகன் - தப்பியோடிய போது பிடிக்க சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு
x
எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆரோக்கியமேரி. இவருக்கு முருகன் என்பவருடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில், முருகன் வீட்டுக்கு வந்த போது அவரை ஆரோக்கிய மேரியின் மகன் நரேஷ், மருமகன் மரியதாஸ் அரிவாளால் வெட்டிகொலை செய்துள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிடவே இருவரும் தப்பி ஓடியுள்ளனர்.இதனையடுத்து ரோந்து பணியில் இருந்த போலீசார் இருவரையும் விரட்டி சென்ற பொழுது கருணாகரன் என்ற காவல் உதவி ஆய்வாளரை  வெட்டிய நரேஷ், கத்தியால் கழுத்தை அறுத்துகொண்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய மரியதாஸை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்