தமிழின் தொன்மை - மதிப்பிடப்பட்ட விவகாரம் : ஆசிரியர்கள் விளக்கமளிக்க நாளை வரை கெடு
12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மையை குறைத்து மதிப்பிடப்பட்ட விவகாரத்தில், பாட புத்தக ஆசிரியர்கள் 13 பேரும் விளக்கம் அளிக்க நாளை புதன்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .
12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மையை குறைத்து மதிப்பிடப்பட்ட விவகாரத்தில், பாட புத்தக ஆசிரியர்கள் 13 பேரும் விளக்கம் அளிக்க நாளை புதன்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது . பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, சில ஆசிரியர்கள் துறை இயக்குனரிடம் விளக்க கடிதங்களை கொடுத்துள்ளனர். 13 ஆசிரியர்களும் விளக்க கடிதங்களை அளித்த பிறகு, அவற்றை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . இதற்கிடையே சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதியை முழுமையாக கற்பித்தல் திட்டத்தில் இருந்து நீக்கியும், மாணவர்களுக்கு அந்தப் பகுதியை கற்பிக்கக் கூடாது எனவும் பள்ளிக்கல்வித் துறை சார்பாக, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Next Story