காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த சாரை பாம்பு : பாம்பை பிடித்து கழுத்தில் வைத்து விளையாடிய ஆட்டோ ஓட்டுனர்

செங்கல்பட்டு இராட்டின கிணறு பகுதியில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று நுழைந்துள்ளது.
காவலர் குடியிருப்புக்குள் நுழைந்த சாரை பாம்பு : பாம்பை பிடித்து கழுத்தில் வைத்து விளையாடிய ஆட்டோ ஓட்டுனர்
x
செங்கல்பட்டு இராட்டின கிணறு பகுதியில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் 10 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் உடனடியாக அருகே உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் வருவதற்குள், அங்கு சென்ற செல்வம் என்ற ஆட்டோ ஓட்டுனர், அந்த சாரை பாம்பை பிடித்து கழுத்தில் வைத்து விளையாடினார். இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் சாரை பாம்பை செல்வம் தீயணைப்புத்துறை வீரர்களிடம் ஒப்படைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்