அதிவேகமாக இயங்கும் தனியார் பள்ளி பேருந்து : பரவும் அதிர்ச்சி வீடியோ

பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, தனியார் பள்ளி வாகனம் அதிவேகமாகச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு,  தனியார் பள்ளி வாகனம்   அதிவேகமாகச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.  திருப்பூர் மாவட்டம், தாராபுரம் - உடுமலை சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது.  இந்த பள்ளி குழந்தைகள் பயணிக்கும் பேருந்து ஒன்று,  இரண்டு தினங்களுக்கு முன்பு தாராபுரத்தில் அதிவேகமாக சென்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெற்றோர், பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்