தஞ்சை : பாமக அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பாமக அலுவலகத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர்.
தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பாமக அலுவலகத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். அதில் அலுவலகத்தில் தூங்கிக்கொண்டு இருந்த ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதே சமயம் அலுவலகத்தில் இருந்த டிவி, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமாயின. அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story