குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் - சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் - சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தூத்துக்குடி சிவந்தாகுளம், பக்கிள்புரம், சுடலை காலனி, முனியசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருமாத காலமாக முறையாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்