மருமகனை வெட்டிக் கொலை செய்த மாமனார் - போலீசார் கைது செய்து விசாரணை

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட மருமகனை மாமனார் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருமகனை வெட்டிக் கொலை செய்த மாமனார் - போலீசார் கைது செய்து விசாரணை
x
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் உள்ள சுயம்புலிங்கம் கோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி.  அப்பகுதியில் பனை நுங்குகளை வாங்கி மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்து வரும் அவர், தனது மாமனார் சிவலிங்கத்திற்கு தொழில் செய்வதற்கு அடிக்கடி பணம் கொடுத்து வந்துள்ளார்.இந்த நிலையில், மாமனார் சிவலிங்கத்திடம் கொடுத்த பணத்தை கேட்டு, முனியாண்டி அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. தன்னை அவமரியாதை செய்ததாக ஆத்திரமடைந்த சிவலிங்கம், தனது மருமகன் என்றும் பாராமல் பனை சீவும் அரிவாளால் முனியாண்டியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன்,  சிவலிங்கத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்