யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தவிர்க்க தேனீக்கள் கூடு - தமிழக வனத்துறை புதிய முயற்சி

காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தவிர்க்க தேனீக்கள் மூலம் கூடுகள் அமைக்க தமிழக வனத்துறை புதிய முயற்சியில் ஈடுபட உள்ளது.
யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தவிர்க்க தேனீக்கள் கூடு - தமிழக வனத்துறை புதிய முயற்சி
x
காட்டு யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களை தவிர்க்க தேனீக்கள் மூலம் கூடுகள் அமைக்க தமிழக வனத்துறை புதிய முயற்சியில் ஈடுபட உள்ளது. கோவையில் நடைபெற உள்ள இந்த சோதனை முயற்சிக்காக ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தேனீக்களை கண்டு யானைகள் அஞ்சி விலகும் என்பதால், விளைநிலங்களுக்கு அருகே தேனீக்கள் கூடு மூலம் வேலி அமைத்து, யானைகள் வராமல் தடுக்கப்படும் முயற்சி ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. செலவு குறைவாக உள்ளதாலும், இயற்கை சூழலுக்கு உகந்ததாக இருப்பதாலும் இத்திட்டத்தை முதற்கட்டமாக சோதனை முயற்சியாக செய்ய திட்டமிட்டு, தமிழக வனத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்