பாடப்புத்தகத்தில் தமிழ் மொழி குறித்த சர்ச்சை பதிவு கே.எஸ்.அழகிரி, ராமதாஸ் கடும் கண்டனம்
12- வது வகுப்பு பாடப்புத்தகம் விவகாரத்தில் பள்ளி கல்வித் துறையின் நடவடிக்கைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
12- வது வகுப்பு பாடப்புத்தகம் விவகாரத்தில் பள்ளி கல்வித் துறையின் நடவடிக்கைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கட்டுரையை தமிழக அரசு தற்போது ஏன் வெளியிட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள கே.எஸ்.அழகிரி, அதில் சமஸ்கிருதம் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துகளை தமிழக அரசு ஏற்றுகொள்கிறதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல, பா.ம.க. நிறுவனர் ராமதாசும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். தமிழை விட தொன்மையான மொழி சமஸ்கிருதம் என்று தவறாக குறிப்பிட்டுள்ளதாக கூறியுள்ள ராமதாஸ், பாடநூலில் இருந்து அந்த வினா நீக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Next Story