சிறுவனின் மரணம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அரசு மருத்துவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை அம்பத்தூரை சேர்ந்த புவனேஸ்வரி, கார்த்திகேயன் என்பவருடன் சேர்ந்து வாழ இடையூறாக இருப்பதாக கருதி தனது மகனை அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.
சிறுவனின் மரணம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அரசு மருத்துவருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
சென்னை அம்பத்தூரை சேர்ந்த புவனேஸ்வரி, கார்த்திகேயன் என்பவருடன் சேர்ந்து வாழ இடையூறாக இருப்பதாக கருதி தனது மகனை அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து புவனேஸ்வரியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார், கார்த்திகேயன் மற்றும் புவனேஸ்வரியை கைது செய்தனர். ஜாமீன் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கையை அரசு தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதை படித்து பார்த்த நீதிபதி சிறுவனின் வலது தொடையில் ஏற்பட்ட ரத்த கட்டினால் உயிர்போகுமா என்று கேள்வி எழுப்பினார். பின்னர், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் சந்திரசேகரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்