இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து... மதுபோதையில் காரை ஓட்டியதால் விபரீதம்
சென்னையில் கார் மோதி படுகாயமடைந்த தனியார் வங்கி மேலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையில் கார் மோதி படுகாயமடைந்த தனியார் வங்கி மேலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த முகமது அப்துல் என்பவர் ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் இருந்தவர்கள் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் முகமது அப்துல் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காரில் வந்த மூன்று பேரில் விஜயகுமார் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Next Story