சமூக சேவகர் அடித்து கொல்லப்பட்ட வழக்கு - சி.பி.சி.ஐ.டி- க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக போராடிய சமூக சேவகர் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக சேவகர் அடித்து கொல்லப்பட்ட வழக்கு - சி.பி.சி.ஐ.டி- க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த தணிகாசலம் என்ற சமூக சேவகர், கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி க்கு மாற்ற கோரி தணிகாசலத்தின் சகோதரர் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரித்தார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தால் வழக்கு கைவிடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, ஒருவருக்கெதிராக மட்டுமே காவல்துறை விசாரணையை நடத்தி உள்ளது என ஆவணங்களில் தெரிய வந்துள்ளதாக கூறி, வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார்.மேலும், ஆவணங்களை இரண்டு வாரங்களில், சிபிசிஐடி கூடுதல் டி ஜி பி-க்கு வழங்க வேண்டும் எனவும், டி.எஸ்.பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை நியமித்து முறையாக விசாரித்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்