நெல்லை முன்னாள் மேயருடன் கொலையுண்ட பணிப்பெண் மாரிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் ரூ.1 லட்சம் நிதி உதவி
நெல்லையில் முன்னாள் தி.மு.க. மேயர் உமாமகேஸ்வரியுடன் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
நெல்லையில் முன்னாள் தி.மு.க. மேயர் உமாமகேஸ்வரியுடன் கொலை செய்யப்பட்ட பணிப்பெண் மாரியம்மாள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை அவரது வீட்டிற்கு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்ட திமுகவினர் சென்று நிதி உதவி வழங்கினார். கொல்லப்பட்ட மாரியம்மாளுக்கு அவரின் வயது முதிர்ந்த தாய் மற்றும் மூன்று மகள்கள் மட்டும் உள்ளனர். மாரியம்மாள் இறந்த நிலையில் , அவரது குடும்பம் ஆதரவற்ற நிலையில் இருப்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் திமுக சார்பில் நிதி உதவி அறிவித்தார்.
Next Story