ஆழியூர் ஐயனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா
புதுச்சேரி அடுத்த ஆழியூர் ஐயனாரப்பன் கோவிலில், ஆடிமாதத்தை ஒட்டி 500-க்கும் மேற்பட்டோர், ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
புதுச்சேரி அடுத்த ஆழியூர் ஐயனாரப்பன் கோவிலில், ஆடிமாதத்தை ஒட்டி 500-க்கும் மேற்பட்டோர், ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பழமை வாய்ந்த பூரணி பொற்கலை உடனுறை ஐயனாரப்பன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆழியூர், திருவாண்டார் கோவில் கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர், குடும்பத்துடன் பங்கேற்று ஊரணி பொங்கல் வைத்து வழிப்பட்டனர். பின்னர் குதிரை மீது கரகம் வைக்கப்பட்டு, ஐயனாரப்பன் சுவாமிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பெண்கள், பொங்கல் பானையை சுமந்தபடி ஊர்வலமாக சென்று, ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story