கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு... வேப்பேரி கால்நடை பல்கலைக்கழகத்தில் தொடங்கியது
தமிழகத்தில், கால்நடை அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் தொடர்பாக படிப்புகளுக்கு 460 இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கி ஜூலை 27ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை பல்கலைக்கழகத்தில் காலை 9 மணிக்கு சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. நடப்பாண்டில் B.V.Sc., படிப்புக்கும், பி.டெக் படிப்புக்கும் சேர்த்து 18 ஆயிரத்து 438 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அழைப்புக் கடிதம் பெற்ற மாணவர்கள், அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும் என்றும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Next Story