பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொந்தரவு அளிப்பது அதிகமாக உள்ளது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவு அளிப்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவு அளிப்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் சேடப்பட்டி அரசுப் பள்ளியில் பணிபுரியும் கருப்பையா என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, நீதிபதி, இந்த கருத்தை தெரிவித்தார். போலீஸ் டி.எஸ்.பி ரவிச்சந்திரன் மீதான பாலியல் புகார் வழக்கை விசாரித்த நீதிபதி, பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என வேதனை தெரிவித்தார். பாலியல் தொல்லை கொடுக்கும் குற்றவாளிகளுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, வழக்கின் விசாரணை முடியும் வரை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், தொலைத்தூரத்தில் உள்ள மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, அறிவுறுத்தினார்.
Next Story