வேலூர் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் - அமைச்சர் தங்கமணி

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
x
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் தங்கமணி  கூறினார். வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டுள்ள அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,  திமுக செய்த பொய் பிரச்சாரத்தை நம்பி பொது மக்கள் ஏமாந்து விட்டனர் என்றும், தற்போது உண்மை தெரிந்து அதிமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளதாகவும் கூறினார். 
 

Next Story

மேலும் செய்திகள்