நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசின் மசோதா நிராகரிப்பு
நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் தான் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசின் மசோதாக்கள் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் தான் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்களித்து இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோத்தாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மசோதாக்களை நிராகரித்தது தொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் ராஜூ எஸ் வைத்யா பதில் மனுத்தாக்கல் செய்தார். இந்த பதில் மனுவை படித்த நீதிபதிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளரை பதில் மனுத்தாக்கல் செய்யும் படி உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Next Story