50 கி.மீ. வேகத்திற்கு மேல் வீசும் காற்று... மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் கடல் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் கடல் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், ரமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, தொண்டி போன்ற பகுதிகளில் ஆயிரத்து 700க்கும் அதிகமான விசைப்படகுகள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், தினம் தோறும் 6 கோடி ரூபாய் வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்படும் என மீனவர்கள் ஒருபுறம் வேதனை தெரிவிக்க, தடையை மீறி மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை ஒருபுறம் எச்சரித்துள்ளது.
Next Story