தொழிலதிபரை கொன்று கடலில் வீசிய வழக்கறிஞர்... பணிப்பெண் மீதான சபலத்தால் உயிரிழந்த தொழிலதிபர்
பணிப்பெண் மீதான சபலத்தால், பல லட்சம் பணம் அளித்த தொழிலதிபரை பெண் வழக்கறிஞர் ஒருவர் கடலுக்குள் கடத்திச் சென்று அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடையாறு, இந்திரா நகரை சேர்ந்தவர் தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ். 50 வயதான அவர், திருமணமாகாத நிலையில், தனது வயதான தனது இரு சித்திகளுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி முதல், காணவில்லை என்பதால், புகாரின் பேரில் அடையாறு போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், அவரது செல்போன் எண், மற்றும் தொடர்புகளை ஆராய்ந்த போலீசார் அடையாறில் உள்ள பெண் வழக்கறிஞர் ப்ரீத்தி என்பவர் பரத்வாஜை கடலுக்குள் கடத்திச் சென்று அடித்து கொலை செய்ததை கண்டறிந்தனர். இது குறித்து கூறிய போலீசார், பரத்வாஜ், சபலம் காரணமாக வீட்டில் வேலை செய்த பெண்ணுடன் சேர்த்து வைக்க கோரி ப்ரீத்தியிடம் 65 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் ப்ரீத்தி ஏமாற்றியதால் உஷாரான பரத்வாஜ் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த பிரீத்தி காசிமேட்டைச் சேர்ந்த பிரகாஷ் என்ற குடுமி பிரகாஷ் மூலம், பரத்வாஜை கடலுக்குள் கடத்திச் சென்று அடித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த பிரகாஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் 5 பேரை கைது செய்த போலீசார், வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரீத்தி உள்பட 4 நான்கு பேரை தேடி வருகின்றனர்.
Next Story