"சிக்கன் பக்கோடா கேட்டதால் சிறுமியை கொலை செய்தேன்" - பகீர் வாக்குமூலம் அளித்த கொலையாளி
திருவள்ளூரில் 4 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்தில் சிக்கன் பக்கோடா கேட்டு அடம் பிடித்ததால் கொலை செய்ததாக போலீசாரிடம் கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்த மதுரா குத்தம்பாக்கம் பகுதியில் ஹாலோ பிளாக் தயாரிப்பு தொழிற்சாலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் 4 வயது மகள் கடந்த 14 ஆம் தேதி மாயமான நிலையில் அடுத்தநாள் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் உறவினரான நிலக்கர் என்பவரை கைது செய்தனர். சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த நிலையில் சிக்கன் பக்கோடா வாங்கிக் கொண்டு சிறுமியை அழைத்துக் கொண்டு பாலத்தின் அருகே சென்றதாக கூறினார். அப்போது சிறுமி தமக்கும் சிக்கன் பக்கோடா வேண்டும் என கேட்டு அடம் பிடித்ததால் ஆத்திரத்தில் அவரை தான் அடித்ததாக கூறியுள்ளார். இதில் பாலத்தில் இருந்து கீழே விழுந்த சிறுமி காயம் பட்டு இறந்துவிட்டதாகவும் போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து நிலக்கரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
Next Story