"தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் மிக குறைவு" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்

நாட்டில் உள்ள பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் தான் குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் மிக குறைவு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம்
x
நாட்டில் உள்ள பிற மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் தான் குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்தபோது, அவர், இந்த தகவலை வெளியிட்டார்.

"காவலர் பதக்க எண்ணிக்கை 3 ஆயிரமாக உயர்வு " - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகவல் : 


காவலர் பதக்கங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 500 -ல் இருந்து, 3 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், இந்த தகவலை வெளியிட்ட அவர், 72 ஆயிரம் போலீசாருக்கு மாதந்தோறும் 5 லிட்டர் பெட்ரோல் படி, வழங்கப்படும் என்று கூறினார். பள்ளிகளில் மாணவர் காவல்படை, தமிழகம் முழுவதும்  விரிவாக்கம் செய்யப்படும் என  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

"2021 தேர்தலிலும் அதிமுக வெற்றி நிச்சயம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை


அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. 9 பெரியதா, 13 பெரியதா என கேள்வி எழுப்பிய மு.க. ஸ்டாலின், முதலமைச்சர் தொகுதியிலேயே, திமுகவிற்கு வெற்றி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். இதற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 2021 தேர்தலிலும் தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்