ஓமலூர் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு
ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை ஊராட்சியில் குடிநீர் குழாய் உடைந்து ஒரு நாளைக்கு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக ஆற்றில் கலந்து வருகிறது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே டேனிஷ்பேட்டை ஊராட்சியில் குடிநீர் குழாய் உடைந்து, ஒரு நாளைக்கு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக ஆற்றில் கலந்து வருகிறது. இந்த பகுதியில் பல மலை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் மழை இல்லாமல், குடிநீர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டேனிஷ்பேட்டை அருகே உள்ள பெத்தேல் பாலம் அருகே, சரபங்கா ஆற்று பகுதியில் ஆள்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் ஏற்றும் இடத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் இரவு - பகல் என ஒரு நாளைக்கு பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது.
இதனால் வேதனை அடைந்த மக்கள், உடைப்பை விரைவில் சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story