சிறுமியை காதலித்து ஏமாற்றிய இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது
காதல் தோல்வியில் சிறுமி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் திருப்பூரில் உள்ள தனது மாமாவின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிறுமியை அருண்குமார் காலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அருண்குமார் சிறுமியை திருமணம் செய்ய மறுப்பு கூறியதால், சிறுமி ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அருண்குமாரை திருப்பூர் தெற்கு மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story