"பள்ளிக்கல்வித்துறை ஆவண புத்தகத்தில் தவறான தகவல்கள்" - சரியான விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு

அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளிவிவரங்களை சரியான முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை ஆவண புத்தகத்தில் தவறான தகவல்கள் - சரியான விவரங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு
x
சட்டப்பேரவையில் நடந்த பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, பள்ளிக்கல்வித்துறை சார்பில் புள்ளி விவரங்கள் அடங்கிய ஆவண புத்தகம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசு பள்ளிகளில், கடந்த ஆண்டை விட நடப்பாண்டில், 4 லட்சத்து 15 ஆயிரம்  மாணவர்களும் பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளில் கடந்த ஆண்டைவிட 42 லட்சம் மாணவர்களும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்,  பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவசர சுற்றறிக்கை ஒன்றை  முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ளார். அதில் கல்வித்துறை மாநில தகவல் முகமை இணையதளத்தில் மாணவர்கள் குறித்த விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்ய வில்லை என்றும் சரியாக பதிவேற்றம் செய்யாத சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் குறித்த சரியான புள்ளி விவரங்களை வரும் 24ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்