கருப்பு சட்டை அணிந்து வந்த காங். கட்சி பிரமுகர் : சிறப்பு மக்கள் குறை தீர் கூட்டத்தில் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கருப்பு சட்டை அணிந்து வந்த காங். கட்சி பிரமுகர் : சிறப்பு மக்கள் குறை தீர் கூட்டத்தில் பரபரப்பு
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகி அய்யலுச்சாமி என்பவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களுக்கு பரோல் வழங்க கூடாது என்பதனை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து மனு அளிக்க வந்தார். இதையடுத்து, அவரை தடுத்து நிறுத்திய போலீசார், கருப்பு சட்டையை அகற்றிய பின்னர் மனு அளிக்க அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்