அழகு நிலையத்தில், பெண் ஊழியர் சடலமாக மீட்பு : பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டார் என பெற்றோர் குற்றச்சாட்டு
கோவையில், இளம்பெண்ணை கொலை செய்து விட்டு, தற்கொலை என அழகு நிலைய உரிமையாளர் நாடகமாடுவதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த ஷோபானா, பாப்பப்பட்டியில் உள்ள அழகு நிலையத்தில் பகுதிநேர பீயூட்டிஷனாக பணியாற்றி வந்துள்ளார். ஷோபனாவின் பெற்றோரை தொடர்பு கொண்ட அழகு நிலைய ஊழியர்கள், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அழகு நிலைய உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு தூக்கிட்ட நிலையில், சடலமாக இருந்த ஷோபனாவை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். ஷோபனா தற்கொலை செய்து கொண்டதாக அழகு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அதனை மறுத்த உறவினர்கள் அவர் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினர். அழகு நிலைய உரிமையாளரை போலீசார் கைது செய்ய வேண்டும் எனக்கோரி, கோவை-திருச்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story