தனியார் கல்லூரி மாணவர்கள் தொடர் மரணம் : சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு டி.ஜி.பி. உத்தரவு
தனியார் கல்லூரியில், மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு, டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தனியார் கல்லூரியில், மாணவர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு, டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா என்கிற மாணவி கடந்த மே மாதம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அடுத்த நாளே ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனித் செளத்ரி என்கிற மாணவர், விடுதியின் பின்புறம் இறந்து கிடந்தார். இதனை அடுத்து இந்த மாதம் 15ம்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் தர்சன் என்பவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த 3 வழக்குகளை மறைமலை நகர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்குகள், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
Next Story